கலவானை பகுதியில் ஒருவர் கொலை – சந்தேகநபர் கைது

5 months ago
Sri Lanka
aivarree.com

கலவானை – மத்துகம வீதிக்கு அருகில் கழுத்து வெட்டப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53 வயதான தெல்கொட கலவான பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்த 37 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.