தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை விடுத்துள்ள அறிவிப்பு

5 days ago
Sri Lanka
aivarree.com

மருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவதற்கு விசேட ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கொள்வனவு கோரிக்கை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர், விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளுக்காக போலி பதிவுச் சான்றிதழ்கள் முன்வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.