எதிர்வரும் 18ஆம் திகதி முதல் சில பாடசாலைகளுக்கு விடுமுறை

1 week ago
Sri Lanka
aivarree.com

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி அனுராதபுரம் மத்திய கல்லூரி, ஸ்வர்ணபாலி தேசிய பாடசாலை, வலிசிங்க ஹரிச்சந்திர மகா வித்தியாலயம், நிவத்தகச்சேதிய தேசிய பாடசாலை, ஸாஹிரா தேசிய பாடசாலை, தேவனம்பியதிஸ்ஸ மகா வித்தியாலயம், மகாபோதி மகா வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம், மிஹிந்தலை கம்மலக்குளம கல்லூரி மற்றும் தந்திரிமலை விமலஞான ஆகிய கல்லூரிகளுக்கு இவ்வாறு விடுமறை வழங்கப்படவுள்ளது.

விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக குறித்த பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் தேசிய பொசன் விழா குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே வடமத்திய மாகாண கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.