எரிபொருள் விலைகள் குறைப்பு

1 month ago
Sri Lanka
aivarree.com

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் வகைகளின் விலைகளில் இன்று நள்ளிரவுடன் மாற்றம் செய்கிறது. 

இதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டு 440 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 

சுப்பர் டீசல் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டு 386 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 

மண்ணெண்ணெய் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டு 245 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது. 

பெற்றோல் 92 ஒக்டேட் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் மாற்றமில்லை. 

இதற்கு அமைய லங்கா ஐஓசியும் தமது எரிபொருள் விலைகளை குறைக்கிறது.