நாட்டின் முக்கியமான மூன்று தேர்தல்களை ஜனாதிபதி அடுத்தடுத்து நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஜனாதிபதி தேர்தலை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கும், பின்னர் ஆகஸ்ட் மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்தவும் அவர் தீர்மானித்துள்ளார்.
இதேநேரம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.