நாடு இருளடையும் அபாயம் – தயாசிறி எச்சரிக்கை

3 months ago
Sri Lanka
aivarree.com

வீதி விளக்குகளை ஒளிரவிட்டமைக்காக, உள்ளுராட்சி மன்றங்களுக்கு பெரும்தொகைக்கான மின் கட்டண பட்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டணங்களை குறித்த உள்ளுராட்சி மன்றங்களால் செலுத்த முடியாத நிலை இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று பாராளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

இந்தநிலையில் குறித்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான மின்விநியோகத்தை இடைநிறுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனைத் தடுக்க நடவடிக்கை ஒன்று அமுலாக்கப்பட வேண்டும் என்றும் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.