20 வருடங்களின் பின்னரும் கூட்டத்தை அள்ளிய “அஹங்கார நகரே”

2 months ago
Infotainment
aivarree.com

சிங்கள இசைத்துறையில் மிகப்பெரிய மைல் கல்லை எட்டிய பாடல் அஹங்கார நகரே. 

2004ஆம் வெளியான இந்த பாடலுக்கான இசையை ரனிந்து லங்காகே வழங்கி இருந்தார். 

இராஜ் குழுவினருடன் இணைந்து பணியாற்றிய ரனிந்துவின் இந்த பாடல், BBC, MTV என முக்கிய சர்வதேச ஊடகங்களில் ஒளிபரப்பாகி முன்னிலையில் இடம்பெற்றது. 

இது தமிழர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடலாகும்.

இந்தப்பாடல் வெளியாகி 20 வருடங்களின் பின்னர் அண்மையில் அந்த பாடலின் பெயரில் இராஜ் மற்றும் ரனிந்து குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். 

இது மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாக, இசைக்கலைஞர் இராஜ் தமது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.