இளையராஜாவுக்கு பிடித்தமான ஹொலிவுட் இசையமைப்பாளர் ஹென்சிம்மருடன், எமது இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கைக்கோர்க்கவுள்ளார்.
நிட்டிஷ் திவாரியின் இயக்கத்தில் ராமாயணம் திரைப்படம் உருவாகிறது.
இதற்கான இசையை ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து ஹென்ஸ்சிம்மர் வழங்கவுள்ளார்.
ஒஸ்கார் விருதுகளை வென்றுள்ள ஹென்ஸ் சிம்மர், இன்செப்ஷன், டியூன், தி ரஷ், இன்றெஸ்டெல்லர் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர்.
இவர் ஏ. ஆ. ரஹ்மானின் நண்பரும் கூட, ஒருமுறை ஒஸ்கார் நிகழ்வில் அவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சியை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது இசைஞானி இளையராகவுக்கும் பிடித்தமான இசையமைப்பாளர்களில் ஹென்ஸ் சிம்மரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.