வங்கிகளில் இன்றைய டொலர் நிலவரம்

10 months ago
aivarree.com

நேற்றைய தினத்தை விட இன்று (21) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி ; நேற்றைய தினம் 315.80 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.26 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.34 ரூபாவிலிருந்து, 332.87 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி ; நேற்றைய தினம் 317.20 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 318.19 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து, 329.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி ; நேற்றைய தினம் 317 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 319 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330 ரூபாவிலிருந்து, 332 ரூபாவாக உயர்ந்துள்ளது.