வங்கிகளில் இன்றைய டொலர் நிலவரம்

10 months ago
aivarree.com

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (ஜூலை 17) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311.42 ரூபாவிலிருந்து 312.24 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 327.76 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 311 ரூபாவிலிருந்து 311.01 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 322 ரூபாவிலிருந்து 322.50 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 309 ரூபாவிலிருந்து 312 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 327 ரூபாவாக பதிவாகியுள்ளது.