வங்கிகளின் AWPR வீதம் 18.69% ஆக குறைந்தது

10 months ago
aivarree.com

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதம் (AWPR) இந்த வாரம் 48 அடிப்படை புள்ளிகள் குறைந்து 18.69 சதவீதமாக உள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, வர்த்தக வங்கிகளில் AWPR கடந்த வாரம் 19.17 சதவீதமாக இருந்தது.

அதே சமயம் ஒரு வருடத்திற்கு முன்பு 22.19 சதவீதமாக இருந்ததுடன், நாணயச் சபை தொடர்ந்து இரண்டு மாதங்களில் நாணயக் கொள்கை வட்டி விகிதத்தை குறைத்ததால் இந்த குறைப்பு வந்துள்ளது.

நிபுணர்களின் கூற்றுப்படி, கொள்கை வட்டி விகிதங்களை மேலும் குறைக்க வேண்டாம் என்று மத்திய வங்கி முடிவு செய்தாலும், அடுத்த சில மாதங்களில் வங்கி வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன் வழங்கல் வீதமானது வாரத்தின் போது தமது முதன்மை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வணிக வங்கியின் கடன்வழங்கல் வீதங்களின் அடிப்படையில் வாராந்தம் இலங்கை மத்திய வங்கியினால் கணிக்கப்படுகின்றது.