மீண்டும் முடக்கலுக்கு தயாராகும் சீனா

1 year ago
World
aivarree.com

சீன நகரமான சியானில் அண்மைய நாட்களில் காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நகரம் முடக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் காய்ச்சல் பரவலானது நகரில் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் சியான் பகுதிகளை முடக்கி, பாடசாலைகளையும் மூடும் நிலைமை ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொவிட் வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில சீனா முழுவதும் காய்ச்சலினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு பற்றக்குறை ஏற்பட்டுள்ளது.

சியானில் உடனடி முடக்கம் தொடர்பான பரிந்துரைகள் எதுவும் இல்லாத நிலையில் எதிர்வரும் நாட்களை அவதானித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படவுள்ளது.