தங்கத்தின் விலையில் சற்றே வீழ்ச்சி

10 months ago
aivarree.com

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் உலக சந்தையில் சற்று வீழ்ச்சி அவதானிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 4.24 டொலர்கள் வீழ்ச்சியடைந்து இறுதியாக 1955.73 டொலர்களாக பதிவாகி இருந்தது.

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலையில் நேற்றைய நாளிலும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 154,500 ரூபாவாகவும் நேற்று நிலவியது.

டொலர் விலையின் அண்மைக்கால அதிகரிப்பே இதற்கான காரணம் என்று தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.