எரிபொருள் விலை அதிரடி குறைப்பு

1 year ago
Sri Lanka
aivarree.com

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாட்டில் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படுகிறது.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி வீட்டுப்பாவனைக்கான ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ. 50 ரூபாவாலும், இலங்கை தொழிற்துறை மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை ரூ. 134 ரூபாவாலும் குறையவுள்ளது.

ஏனைய எரிபொருள் விலைகளில் இதுவரை மாற்றமில்லை.