பரீட்சைகள் தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் அப்டேட்

1 year ago
Sri Lanka
aivarree.com

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களைத் திருத்தும் பணியினை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்தவுடன், வினாத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

விடைத்தாள்களைத் திருத்துவதற்கு 19,000 ஆசிரியர்கள் தேவைப்பட்டாலும், இதுவரை 13,337 பேர் மாத்திரம் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

எவ்வாறெனினும் தமிழ் மொழி மூலமான வினாத்தாள்களைத் திருத்துவதற்கு போதுமான ஆசிரியர்கள் உள்ளனர்.

இதேவேளை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.