இலங்கையில் இந்திய ரூபாவில் வர்த்தகம் தொடர்பான அப்டேட்!

10 months ago
aivarree.com

இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட நாணயமாக இலங்கை அறிவித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை (20) தெரிவித்தார்.

இது குறித்து டில்லியில் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர்,

எங்கள் தேசிய நாணயங்களின் வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஏற்கனவே இந்திய ரூபாயை அவர்களின் அமைப்பில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவித்துள்ளது.

இந்திய ரூபாயை (INR) ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக மாற்றுவது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக தீர்வை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல், இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளும் பரிவர்த்தனைகளுக்கும் வசதியாக அமையும் என்றார்.