கூட்டமைப்பில் இரட்டைப் பிரஜாவுரிமை எவருக்கும் கிடையாது | சுமந்திரன் உத்தரவாதம்

2 years ago
Sri Lanka
aivarree.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்து, அது தொடர்பில் யாராவது ஆட்சேபத்தை தெரிவித்தால் அவரது பெயரை நிராகரிக்கின்ற அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்

அதன் பிறகு அவர்கள் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டால் நீதிமன்றத்தின் ஊடாக அதனை கேள்விக்குட்படுத்தி அவரது பதவியை பறிக்க முடியும். கீதா குமாரசிங்கவின் விடயத்திலும் இதுவே நடந்தது.

22ஆம் திருத்தத்தின்படி இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள்தற்போதுள்ள பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால் அவர்கள் தங்களுடைய பாராளுமன்ற தகுதியை இழப்பார்கள் என்றார்.