ஹெக் செய்யப்பட்ட ஹரிஷ் ஜெயராஜின் டுவிட்டர்

3 months ago
Infotainment
(179 views)
aivarree.com

பிரபல இசையமைப்பாளர் ஹரிஷ் ஹெயராஜின் டுவிட்டர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2 தினங்களாக தமது டுவிட்டர் கணக்கு ஹெக் செய்யப்பட்டிருப்பதாக ஹரிஷ் ஜெயராஜ் அறிவித்துள்ளார். 

கணக்கை மீட்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் தமது ஃபேஸ்புக் பதிவொன்றில் கூறியுள்ளார். 

மலேசியாவில் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்திய ஹரிஷ் ஜெயராஜ் சில தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பினார். 

தற்போது அவர் கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் உருவாகிவரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்துக்கான பின்னணி இசையமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.