ரயில் சேவையும் முடங்கும் அபாயத்தில்

2 years ago
Sri Lanka
aivarree.com

ரயில்வே சேவையாளர்கள் பணிக்க சமூகமளிப்பதற்கு எரிபொருளை விநியோகிக்காவிடின் எதிர்வரும் நாட்களில் ரயில் சேவை மேலும் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்கவில்லை.

இதன் காரணமாக நகரங்களுக்கிடையிலான ரயில் சேவை, தூரசேவை பயணிகள் ரயில், அலுவலக ரயில் சேவை உள்ளிட்ட 26 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பிரதானமாக ரயில்சேவைகள் இன்று இடம்பெறவில்லை.

பொதிகள் விநியோக சேவை ரயில் இரத்து செய்யப்பட்டதால் மருதானை ரயில் நிலையத்தில் 300 பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.