மீண்டும் கடும் வெப்ப நிலை | 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

1 week ago
Sri Lanka
(384 views)
aivarree.com

இலங்கையில் மீண்டும் கடுமையான வெப்பநிலையுடனான வானிலை நிலவுகிறது.

குறிப்பாக 12 மாவட்டங்களில் கடுமையான வெப்ப நிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மனித உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய அளவு வெப்பம் நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.