பாடசாலை அதிபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு

1 week ago
Sri Lanka
(676 views)
aivarree.com

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இம் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

சில பாடசாலைகளில் சித்தியடை முடியாதவர்கள் என்று கருதி சில மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி சீட்டு வழங்கப்படாமல் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாடசாலைகளின் அதிபர்கள் எவரும், அவ்வாறு எந்த மாணவர்களினதும் பரீட்சை அனுமதி சீட்டை வழங்காமல் தடுத்து வைக்க முடியாது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

பரீட்சை அனுமதி சீட்டு கிடைக்கப்பெறாமல் எந்த மாணவரேனும் பரீட்சைக்கு தோற்ற முடியாத நிலை ஏற்பட்டால், அதற்கு அந்த பாடசாலையின் அதிபரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.