கயானாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து | 19 மாணவர்கள் பலி

2 weeks ago
World
(39 views)
aivarree.com

கயானாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தலைநகர் ஜோர்ஜ்டவுனுக்கு தெற்கே 320 கிமீ (200 மைல்) தொலைவில் உள்ள போட்டாரோ-சிபருனி மாவட்டத்தில் உள்ள தங்கச் சுரங்க நகரமான மஹ்டியாவில் உள்ள மேல் நிலைப் பாடசாலையில் திங்கள்கிழமை (22) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடியினர் என்று தென் அமெரிக்க நாட்டின் அரசாங்கம் கூறுகிறது.

14 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஐந்து பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறந்தனர்.

தீ விபத்தின் பின்னர் பாடசாலையின் சுவர்களை உடைத்து சுமார் 20 மாணவர்களைத் தீயணைப்பு வீரர்கள் காப்பாற்றியதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.