இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

1 week ago
Sri Lanka
(304 views)
aivarree.com

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

அதன்படி இன்று முதல் ஜூன் 11 ஆம் திகதி வரை பாடசாலைகள் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.

இதேவேளை, O/L பரீட்சை மே மாதம் 29 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.