ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளது: நிக்கெய் மாநாட்டில் ஜனாதிபதி

9 months ago
Sri Lanka
aivarree.com

ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் இடம்பெறும் ஆசியாவின் எதிர்காலம் தொடர்பான 28 ஆவது சர்வதேச மாநாட்டில்”(Nikkei) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,

  • ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல் மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது, அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது.
  • உலக சனத்தொகையில் 60% வீதமான மற்றும் உலகளாவிய வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் ஆசியாவின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க எடுத்துரைத்தார்.
  • சீனாவின் மீட்சி, இந்தியாவின் உள்நாட்டு தேவை மற்றும் ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற முன்னேறிய பொருளாதாரங்களின் பங்களிப்பு ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான பிராந்தியத்தின் திறனை அவர் வலியுறுத்தினார்.
  • ஜனாதிபதி, வர்த்தக ஒருங்கிணைப்பு, கடன் நிலைத்தன்மை மற்றும் ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தினார், பொருளாதார நிர்ப்பந்தம் மற்றும் துண்டிப்புகளை நிராகரித்து, உலக வர்த்தக அமைப்புடன் விதிகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறையை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  • அந்தவகையில், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மனித உரிமைகள், காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு என ஆசியாவின் மூன்று முக்கிய சவால்களை ஜனாதிபதி அடிக்கோடிட்டுக் காட்டினார்.
  • ஜப்பானின் ஒத்துழைப்பு அணுகுமுறையை ஆதரித்ததுடன், ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஆசியா நாடுகளுக்கிடையில் திறந்த உரையாடல்களுக்கு அழைப்பு விடுத்தார், அமைதியான மற்றும் வளமான ஆசிய பிராந்தியத்தின் தோற்றத்திற்கு இது முக்கியமானது என்றும் கூறினார்.
  • தனது தெற்காசிய நாடு நெருக்கடியில் சிக்கியுள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சிப்பதால், பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதார கூட்டாண்மையில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாக அறியப்படும் RCEP, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மக்கள்தொகையில் சுமார் 30% உள்ளடக்கிய 15 ஆசிய-பசுபிக் நாடுகளை உள்ளடக்கியது. இது சீனா மற்றும் ஜப்பானை உள்ளடக்கியது.