உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிக்கப்பட்டது

5 months ago
World
aivarree.com

அமேசான் காடுகளில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ராட்சத அனகொண்டா இனத்தை விஞ்ஞானிகள் தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த அனகொண்டா 7.5 மீட்டர் வரை வளரக்கூடியது எனவும் சுமார் 500 கிலோ எடை கொண்டது எனவும் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் இது உலகில் இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் கனமான பாம்பாகும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை, நான்கு வகையான அனகொண்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் மிகப்பெரியது இந்த பச்சை வகை அனகொண்டாவாகும்.

தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளான அமேசான், ஓரினோகோ மற்றும் ஈசிகிபோ நதிகள் மற்றும் சில சிறிய நீர்நிலைகளில் இவை வாழ்கின்றன என கூறப்படுகிறது.

இந்த அனகொண்டாக்கள் , மின்னல் வேகத்திலும் இரையை சுற்றி சுழலும் திறன் ஊடாகவும் அவற்றின் இரையை முழுவதுமாக விழுங்குவதன் ஊடாக விரைந்து உயிரை பறிக்க கூடியவை என அறியப்படுகின்றது.

பல தசாப்த கால ஆய்வின் பின்னர் புதிதாக வெளியிடப்பட்ட பச்சை அனகொண்டா மரபணு ரீதியாக இரண்டு வெவ்வேறு இனங்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.