பரீட்சை நிலையங்களிற்கு அருகில் பல்கலை மாணவர்கள் போராட்டம் – நீதிமன்றம் தடை

6 days ago
Sri Lanka
aivarree.com

பரீட்சை மத்தி நிலையங்களுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்தவகையில் சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நுகேகொட அனுலா வித்தியாலயம், சமுத்திராதேவி வித்தியாலயம், சுஜாதா பாலிகா வித்தியாலயம், புனித ஜோசப் பெண்கள் பாடசாலைக்கு அருகில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.