இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான 59வது தடகள போட்டி ஆரம்பம்

4 weeks ago
SPORTS
aivarree.com

இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான 59 வது விளையாட்டு தடகள விளையாட்டு போட்டி இன்று (22) தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியின் ஆரம்ப விழா இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

59 வது இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் 21 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 575 வீர வீராங்கனைகள் 26 நிகழ்வுகளில் போட்டியிடவுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற 58வது இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில், கோலூன்றிப் பாய்தல் ஆண்கள், முப்பாச்சல் ஆண்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான 10000 மீற்றர் நடை போட்டி மற்றும் 200 மீற்றர் தொடர் அஞ்சல் ஓட்டம் ஆகியவற்றில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் ஐந்து புதிய தேசிய சாதனைகளைப் படைத்தனர் என்பது குறிப்பிடதக்கது.