சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இரத்தினபுரி வீரர்

3 weeks ago
SPORTS
aivarree.com

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரை மலேசியாவில், சர்வதேச சிலம்பம் போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், கட்டார், மலேசியா, டுபாய், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 600 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

இரத்தினபுரி, கஹாவத்த, கட்டங்கி பகுதியைச் சேர்ந்த இவர், மலேசியாவுக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.