பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

3 weeks ago
World
aivarree.com

பிரபல நடிகரான டேனியல் பாலாஜி மாரடைப்பால் தனது 48 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

டேனியல் பாலாஜிக்கு நேற்று(29) இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் பொல்லாதவன், காக்க காக்க உள்ளிட்ட படங்களில் டேனியல் பாலாஜி நடித்து ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர்.

சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் வேட்டையாடு விளையாடு, பைரவா மற்றும் வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.