பேஸ்புக் – இன்ஸ்டாவில் மெட்டா செய்யும் முக்கியமான மாற்றம்

5 months ago
World
aivarree.com

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தகவல் பரிமாற்றங்கள் தற்போது பாரிய அளவில் அதிகரித்துள்ளது.


இதனால் பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியான சேட்டைகளும் அதிகரித்துள்ளது.


குறிப்பாக நிர்வாணப்படங்கள் பகிரப்படுவதும், அனுமதியின்றி அவ்வாறான படங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நிர்பந்திக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.


இதனை தடுப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்றை அமுலாக்கவுள்ளதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.


இதன்படி மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் தகவல் பரிமாற்றுத் தளங்களில் மறைகுறியிடப்பட்ட தகவல் பரிமாற்றமாக இருந்தாலும் அதன் ஊடாக நிர்வாணப் படங்களை பகிரமுடியாது செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.


தெரிவு அடிப்படையில் அமுலாக்கப்படவுள்ள இந்த பொறிமுறையானது, பெண்கள் மற்றும் யௌவனர்களை (டீனேஜர்களை) பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ளது.


13 வயதுக்கு குறைந்த சிறார்களுக்கு தகவல் பரிமாற்ற வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.