IPL 2024 – முதல் நாள் வெற்றியை வசப்படுத்திய CSK

7 months ago
SPORTS
aivarree.com

IPL 2024 சீசன் நேற்று(22) ஆரம்பித்த நிலையில் நேற்யை முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூருவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் சாதனையையும் சென்னை தக்க வைத்துக்கொண்டது.

ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை முதலும் கடைசியுமாக 2008ல் ராகுல் டிராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை தோற்றது.

ஆனால் அதன் பின் விளையாடிய 8 போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை அந்த சாதனையை தற்போது வரை தக்கவைத்து கொண்டுள்ளது.