‘ஐயோ சாமி’ பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம்

6 months ago
Infotainment
aivarree.com

சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது.

பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர்.