அம்பாறையில் அதிகரிக்கும் முதலைகளின் நடமாட்டம்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.

தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை ,நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9,5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.

மேலும் இம்மாவட்டத்தில் களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.மேலும் வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.