இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்

1 month ago
World
aivarree.com

இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி சற்றுமுன் காலமானார். 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று அவர் காலமானதாக, தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இசைஞானி இளையராஜா இலங்கை வந்துள்ள நிலையில், இந்தநிலை ஏற்பட்டுள்ளது. 

47 வயதான பவதாரணி, இலங்கையில் கடந்த 6 மாதங்களாக ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந்த நிலையில் அவரது பூதவுடல் நாளை சென்னைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.