பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி சட்டோகிராமில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொள்வதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
அவர் இல்லாத நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, உதவி பயிற்சியாளர் நிக் போதாஸ் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.