இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினைக்கு மீனவர்களே காரணம்

3 months ago
Sri Lanka
aivarree.com

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு எல்லை மீறி கடலுக்குள் பிரவேசிப்பவர்களே காரணம் எனவும் மீனவர்களுக்கு முதலீடு செய்பவர்களின் கோரிக்கைக்கு இணங்க மீனவர்கள் இவ்வாறு எல்லை மீறுவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சூரியன் FM விழுதுகள் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டார்.

குறிப்பிட்டளவு மீன்களை கொண்டு வர வேண்டும் எனவும் அவ்வாறில்லையேல் கொடுப்பனவு வழங்கப்படாது எனவும் மீனவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதால் அவர்கள் சட்டத்தையும் மீறி இவ்வாறு செயற்படுகின்றனர்.

இந்தியாவிற்கு பாரியளவிலான கடற்பரப்பு காணப்படுவதனால் தமிழக அரசியல்வாதிகள் மீனவர்களின் இந்த சட்ட மீறலை தடுக்க முன் வர வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றுக்கணக்கான மீனவர்கள் தினமும் இவ்வாறு இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி வருகின்ற நிலையில் இது தமிழக மற்றும் இந்திய மத்திய அரசிற்கு தெரியாமல் இடம்பெறுவதாக கருத முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.