மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இன்று (28) அறிவிக்கப்பட உள்ளன.
புதிய கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஆராய்வதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும் மின்சார கட்டணத்தை 20%க்கும் அதிகளவில் குறைக்க முடியும் என பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.