தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் – சிட்னி தேவாலய ஆயர்

1 month ago
World
aivarree.com

சிட்னி தேவாலயத்தில் தன்மீது தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை மன்னித்துள்ளதாக ஆயர் மரி மார் இமானுவேல் தெரிவித்துள்ளார்.

ஆயர் மருத்துவமனையிலிருந்தபடி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலிற்கு பழிவாங்கும் விதத்தில் செயற்படவேண்டாம் – இயேசுவை போல நடந்துகொள்ளுங்கள் என ஆயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ள அவர் தன்னை தாக்கியவருக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவரை நான் மன்னிக்கின்றேன் நீங்கள் எனது மகன் நான் உங்களை நேசிக்கின்றேன் உங்களுக்காக நான் பிரார்த்திக்கின்றேன் என தெரிவிப்பதாக ஆயர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டார்.