whatsapp அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய அம்சம்

2 weeks ago
World
aivarree.com

வட்ஸ்அப் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினமும் (16) வட்ஸ்அப் மேலும் ஒரு புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய அம்சமானது வட்ஸ்அப் செட்களுடன் (chat) தொடர்பானது என்று கூறப்படுகிறது.

அதன்படி, இந்தப் புதிய அம்சமானது செட்களை கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது என்றும் மெட்டா (meta) தெரிவித்துள்ளது.

Meta அறிமுகப்படுத்தியுள்ள இந்த அம்சத்தில், புதிய பில்டர்களை (Filter) அறிமுகப்படுத்தியுள்ளது, அவை வட்ஸ்அப் அரட்டைப் பட்டியலின் மேலே தோன்றும், செட்களை கண்டறிவதை எளிதாக்குகிறது.

இந்த புதிய Filter போன்றவை, அனைத்தும் (இயல்புநிலை காட்சி), படிக்காதது (படிக்காததாகக் குறிக்கப்பட்ட செய்திகள்) மற்றும் குழுக்கள் (Group chat) போன்றவற்றை தனித்தனியே Filter செய்து பயனர்களின் பயன்பாட்டிற்கு எளிதான முறைமையை உருவாக்கியுள்ளது.

நேற்று (16) அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Filter அம்சமானது அனைத்து வட்ஸ்அப் பயனர்களுக்கும் “எதிர் வரும் வாரங்களில்” புதுப்பிப்பாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.