ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி இன்று இலங்கை வருகிறது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து ஆரம்பமாகின்றது.
மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் பின்னர், 20க்கு20 கிரிக்கட் போட்டிகள் மூன்றும் இடம்பெறவுள்ளன.
அதற்கு முன்னர், பெப்வரி மாதம் 1ம் திகதி தொடரின் ஒரேயொரு டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுக்கும் இடையில் ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக ஒருநாள் போட்டிகளை பெப்ரவரி மாதம் 9ம் திகதி முதல் கொழும்பில் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்த போதும், அந்த போட்டிகள் அனைத்தும் கண்டிக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதேநேரம் பல வருடங்களுக்குப் பின்னர் 3, 20க்கு20 போட்டிகளும் தம்புள்ளை மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.