நானு-ஓய – ரதெல்லையில் பேருந்தை அதிவேகமாக செலுத்தி வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு பிணை வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 20ஆம் திகதி ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.
சம்பவம் தொடர்பாக கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவர் 3 பேரின் சரீர பிணைகளிலும், 25,000 ரூபாய் ரொக்கப்பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
-
ஆசிய விளையாட்டு போட்டி ; இலங்கை வென்ற பதக்கம் பறிபோனது
-
இன்று கூடும் பாராளுமன்றம்
-
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி