மேல் மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சைக்கு 2,400 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (01) பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய ஆசிரியர்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் எனவும் ஏப்ரல் விடுமுறையின் பின்னர் அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.