மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் | மத்திய வங்கி ஆளுநர்

1 week ago
Sri Lanka
(276 views)
aivarree.com

பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையுடன், கட்டுப்பாடுகள் பலவற்றை மேலும் தளர்த்துவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய CBSL ஆளுநர் வீரசிங்க:-

– பணவீக்க அதிகரிப்பு மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியை கட்டுப்படுத்த இலங்கை தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

– பணவீக்கம் எந்தவொரு பொருளாதாரத்திற்கும் முதல் எதிரியாகும் – இப்போது அது குறைகிறது.

– எந்தவொரு கூட்டுக் கொள்கை நடவடிக்கைகளும் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வேதனையானவை என்றாலும், உயரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையின் பேரழிவுத் தாக்கங்களைத் தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் அவசியம்.

– பணவீக்கத்தைக் குறைத்தல் மற்றும் கொடுப்பனவு நிலுவை நெருக்கடியைத் தீர்ப்பது போன்ற முக்கிய நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் பலனை நாடு தற்போது அறுவடை செய்கிறது.

– தொடர்ந்து, மக்களை பாதிக்கும் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும், என்றார்.