மின் நுகர்வு 20 சதவீதத்தால் வீழ்ச்சி

1 year ago
Sri Lanka
aivarree.com

மின்சார கட்டண உயர்வின் இரு மாதங்களின் பின்னர் மின்சார நுகர்வானது சுமார் 20 சதவீதம் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை மின்சார சபை எதிர்பார்க்கும் வருமானத்தை ஈட்டுவதில் சிக்கல் ஏற்படும் என்று PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் நுகர்வோர், 30 முதல் 90 அலகுகள் வரையிலான பாவனையினை முன்னர் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மின்சார கட்டணங்களின் அதிகரிப்பானது அதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறெனினும் மின்சார கட்டணத்தை இவ்வாறு அதிக சதவீதமாக அதிகரித்தது இலங்கை மின்சார சபைக்குச் சாதகமான அறிகுறியாக அமையாது என்றும் அவர் கூறினார்.