பாணும் ஏனைய பேக்கரி உற்பத்திகளும் மேலும் விலை கூடுமாம்!

1 year ago
aivarree.com

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் நிச்சயம் அதிகரிக்கும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரிகளின் மின்சார கட்டணம் முன்பு இருந்ததைவிட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, அதன் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ள முடியாது.

பேக்கரித் தொழிலுக்குத் தேவையான கோதுமை மா, முட்டை மற்றும் ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. 

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது என அவர் கூறினார்.