நடிகர் அஜித் குமாரின் தந்தை காலமானார்

2 months ago
Infotainment
(88 views)
aivarree.com

நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மலையாளி பி சுப்பிரமணியம், அவருக்கு இறக்கும் போது வயது 84.

அவருக்கு மோகினி என்ற மனைவியும், அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார் ஆகிய மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

தமிழ் திரையுலகினர் மற்றும் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.

தற்சமயம் அஜித் குமார், தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் ஐரோப்பாவில் விடுமுறையில் உள்ள நிலையில், விரைவில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.