சூரியனில் ஓட்டை | வெள்ளிக்கிழமை பூமியை அடையவுள்ள சூரிய காற்று

1 year ago
World
aivarree.com

சூரியனில் பூமியைக் காட்டிலும் 20 மடங்கு பெரிய ஓட்டை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

கொரோனல் ஹோல் என அழைக்கப்படும் இது, சூரியனின் 11 ஆண்டுகால சுழற்சியில் தென்படும் ஒன்றாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. 

எனினும் அதிலிருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிலோமீற்றர் வேகத்தில் சூரியகாற்றை அனுப்பக்கூடியது எனவும், அந்த காற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூமியை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றனர். 

எவ்வாறாயினும் கொரோனல் ஹோல்ஸ் என்ற இந்த ஓட்டையால் ஆபத்துகள் குறைவு எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

-insider-