சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 3 முக்கிய உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹர்ச டீ சில்வா, சரத் ஃபொன்சேகா மற்றும் பாட்டலி சம்பிக்க ஆகியோர் அமைச்சுப் பதவிகளை ஏற்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தின் போது அவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.