இலங்கை மக்கள் தமது கடினமான காலத்தின் கடைசி கட்டத்தை தற்போது அனுபவிக்கிறார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடக பிரதானிகளை சந்தித்து உரையாடும் போது அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
தாம் முன்னதாகவே கூறியது போன்று 3 வார கடுமையான காலத்தை தற்போது மக்கள் அனுபவிக்கிறார்கள்.
இந்த காலம் முடிந்ததும் நாடு படிப்படியாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி அதிகரித்திருந்தாலும் இந்தியாவுடன் கலந்துரையாடி விரைவில் எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.