ஓட்டுநர் உரிமம் வழங்க புதிய நடைமுறை | மோட்டர் திணைக்களம் அறிவிப்பு

6 days ago
Sri Lanka
(392 views)
aivarree.com

ஓட்டுநர் உரிமத்தை கையடக்கத் தொலைபேசிகளுக்கு வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கூறியுள்ளார்.

இந்த புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அட்டை தேவையில்லை எனவும் அது கையடக்க தொலைபேசிக்கே அனுப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தேவைப்படுபவர்கள் ஓட்டுனர் உரிம அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஓட்டுநர் உரிம அட்டையை அச்சிடும் பணிகள், அதன் உள்ளீடுகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டு, தற்காலி கடிதமே வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.